பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு அவசியம் இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய போதே அண்ணாமலையுடன் பேசினேன். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். கூட்டணியில் மீண்டும் சேருமாறு அண்ணாமலை நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில், அதனை டிடிவி நிராகரித்துள்ளார்.




