சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சாக்கோட்டை ஒன்றியத் துணைத் தலைவர் பழனியப்பன் (34) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கட்டுமான பணிகளை பார்வையிட சென்ற அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




