பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம்.. நாட்டு வைத்தியம்..!!

Oplus_131072

பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம் நாட்டு வைத்தியம்

அழகான குழந்தை பெற…

கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது தர்ப்பூசணிப் பழம் சாப்பிட்டு வர மூளைக்கு பலமும் கல்லீரலுக்கு வலுவும் ஏற்படுவதுடன் பிறக்கும் குழந்தையும் நல்ல நிறத்துடன் அழகாக இருக்கும்.

அலர்ஜிக்கு…

ஒவ்வோர் உடலுக்கும் ஒத்துக் கொள்ளாதவை என்று சில உண்டு. அவற்றைச் சேர்த்துக்கொண்டால் அலர்ஜி ஏற்படும். அதை காணாக்கடி என்பார்கள். உடலில் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு விடும். இதைப் போக்க சிறிது வேப்பிலையுடன் ஏழெட்டு மிளகையும் சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகசவென்று மென்று விழுங்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட அரிப்பும் தடிப்பும் மறையும்.

அளவுக்கு மிஞ்சிய போக்கா…

தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் தேன் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இரத்தம் கொட்டும் மூலத்திற்கும். அளவுக்கு மிஞ்சிய மாதந்தரப் போக்கிற்கும் இப்பூவின் கஷாயம் நல்ல பலனளிக்கிறது. சாதாரண இருமலுக்கும் இக்கஷாயத்தை உசிதம் போல் சாப்பிட்டுக் குணம் பெறலாம்.

அரசமரத்து இலை. நாவல் இலை. மாவிலை. அத்தி இலை இவற்றைச் சமபங்கு எடுத்து சுத்தம் செய்து கஷாயம் வைத்துச் சாப்பிடலாம். நாள்தோறும் காலையும் இரவும் 100 மி.லி. பருகி வர பத்து தினங்களில் சரியாகி விடும்.

முருங்கைப் பூவை அரைத்து ஒரு பெரிய உருண்டை அளவு எடுத்து அரை லிட்டர் பசும்பாலில் கரைத்து அத்துடன் அரைவிட்டர் தேங்காய்ப் பாலையும் சேர்த்து அடுப்பிலேற்றி பக்குவமாக லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு தினமும் எலுமிச்சங்காயளவு சாப்பிட்டு வர ஒரு வாரத்தில் பெரும்பாடுப்பிணி நீங்கும்.

மாத விலக்கு அநேக நாள்கள் நீடித்தால் நன்கு காய்ந்த மாங்கொட்டை பருப்பை பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுத்தமான தேன் விட்டு காலை மாலை சாப்பிட்டு வர மூன்றே நாள்களில் சரியாகி விடும். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலும் சரியாகி விடும்.

மாதவிலக்கு அதிக நாள்கள் நீடித்தால் அருகம்புல்லையும் மாதுளை இலையையும் சேர்த்துக் கஷாயம் வைத்து அரை டம்ளர் காலை மாலை சாப்பிட்டு வர இரண்டொரு நாள்களில் மாத விலக்கு நின்று விடும்….

Read Previous

முகம் பொலிவு பெற – இந்த ஒரு பொருளை 10 நாட்கள் போடுங்க..!!

Read Next

பாம்புகள் அருகே வர முடியாத 8 அற்புதமான தாவரங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular