கிருஷ்ணகிரி ஊத்தங்கரை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜவ்வாது மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாம்பாறு அணைக்கு வினாடிக்கு 800 கனஅடி நீர்வரத்து வந்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 18.6 அடியாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, அணையின் முழு நீரும் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித் துறை சார்பில், ஆற்றில் குளிக்கவோ அல்லது செல்பி படம் எடுக்கவோ கூடாது என கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




