ஓமன் நாட்டின் கும்ஜார் நகருக்கு வடமேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் சரக்கு கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
சம்பவம் நடைபெற்றதும், கப்பலில் இருந்த ஊழியர்கள் அவசர மீட்பு நடைமுறைகளைப் பின்பற்றி மீட்புப் படகுகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது ஆளில்லாமல் கடலில் மிதந்து கொண்டிருக்கும் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் பிற கப்பல்களுக்கு முன்னெச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




