திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. குழந்தையை புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பீகாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




