பிரட் உப்புமா எப்படி பண்றதுன்னு நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த மாதிரி பிரட் உப்புமா கண்டிப்பா பண்ணுங்க உங்க வீட்ல இருக்க பெரியவங்கள இருந்து குழந்தைகள் வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த பிரட் உப்புமா எப்படி பண்றதுன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரட்
ரவை
பெரிய வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
கடுகு
உப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
ஐந்து பிரட் துண்டுகளை நான்கு புறமும் வெட்டி எடுத்துவிட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய், 100 கிராம் ரவை மற்றும் பொடித்து வைத்துள்ள பிரட்டை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன், 250 மில்லி தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள பிரட், ரவை சேர்த்து இறுகும் வரை கலந்து விடவும்.
இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.




