Oplus_131072
இன்னைக்கு பிரண்டை குழம்பு வைச்சேன்… உண்மையிலயே சூப்பரா இருந்துச்சு… வழக்கமா நாம புளிக்குழம்பு வெங்காயக்குழம்பு வைக்கிற மாதிரிதான்…
பிரண்டை- ஒரு கை பிடி அளவு
சின்ன வெங்காயம் 100.கிராம்
பூண்டு – சிறிது
தக்காளி – 2 அல்லது 3
வெந்தயம் சிறிது
புளி நெல்லிக்காய் அளவு
தேங்காய்
கொஞ்சம் சோம்பு
பிரண்டைய தோல் நீக்கி சிறியதாக கட் பண்ணி வைச்சிடனும். தண்ணில போட்டா கை அரிக்கும் அதனால தோல் சீவிட்டு தண்ணில போடுங்க பிஞ்சா இருந்தால் தோல் சீவ வேண்டியதில்லை. வெங்காயத்தை உறிச்சு இரண்டா கட் பண்ணி வைக்கணும், தக்காளிய நாளா கட் பண்ணனும். தேங்காய துருவி ஒரு ஸ்பூன் சோம்பு வைத்து அரைச்சு எடுத்துக்கனும். புளிய தண்ணில உறப்போட்டு கரைச்சு வைச்சிட்டு.
பாத்திரத்தை அடுப்பில் வைச்சு தேவையான எண்ணெய் விட்டு பிரண்டைய வதக்கி எடுத்துட்டு அதே எண்ணெய்யில் வெந்தயம் போட்டு சிவக்க விட்டு கறிவேப்பிலை பூண்டு,சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கிட்டு நறுக்கிய தக்காளி, வதக்கிய பிரண்டை, போட்டு மேற்கொண்டு வதக்கிட்டு கொஞ்சம் மஞ்சள் தூள், குழம்பு மசாலா, உப்பு சேர்த்து ஒரு புரட்டு புரட்டிட்டு புளிய கரைச்சு அதுல ஊத்தி கொஞ்சம் கொதிக்க விட்டு அரைச்சு வைச்ச தேங்காய ஊத்தி ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அருமையான பிரண்டை குழம்பு ரெடி…
சுடு சாதத்தில் நாம வைச்ச குழம்பை ஊத்தி சாப்பிட்டால் வேற லெவலா இருக்கும். பிரண்டை கிடைச்சா ஒரு முறை இப்படி செய்து பாருங்க…




