பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்நிலையில், பிரதோஷம் அன்று சிவபெருமானை எந்த மலர்கள் கொண்டு வழிபட வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பிரதோஷம் அன்று முல்லைப் பூ கொண்டு சிவபெருமானை வழிபட்டால் கடன் விலகும் என்று கூறப்படுகிறது.
பிரதோஷம் அன்று செம்பருத்தி பூ கொண்டு சிவபெருமானை வழிபட்டால் பணம் சேரும் என்று கூறப்படுகிறது.
பிரதோஷம் அன்று ரோஜா பூ கொண்டு சிவபெருமானை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்று கூறப்படுகிறது.
மோட்சம் கிடைக்க சிவபெருமானை பிரதோஷம் அன்று எருக்கம் பூ கொண்டு வழிபட வேண்டுமாம்.
தாமரைப் பூ கொண்டு சிவபெருமானே பிரதோஷ மன்ற வழிபட்டால் ஐஸ்வர்யம் தரும் என்று கூறப்படுகிறது.
தொழிலில் வெற்றி பெற நினைப்பவர்கள் பிரதோஷம் அன்று சிவபெருமானை தும்பை பூ கொண்டு வழிபட வேண்டும்.
மன அமைதி வேண்டும் சிவபெருமானே என்று வேண்டுபவர்கள் பிரதோஷம் அன்று சிவபெருமானை அரளிப்பூ கொண்டு வழிபட வேண்டும்.
பிரதோஷம் அன்று சிவபெருமானை மல்லிப்பூ கொண்டு வழிபட்டால் தம்பதியர் இணக்கம் ஏற்படுமாம்.
பிரதோஷம் அன்று சிவபெருமானை பிச்சிப்பூ கொண்டு வழிபட்டால் எதிரி விலகும் என கூறப்படுகிறது.
சங்குப்பூ கொண்டு சிவபெருமானை பிரதோஷ மன்று வழிபட்டால் வறுமை அகலும் என கூறப்படுகிறது.




