இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பேமஸ் ஆகி வருகிறது பிரவுன் அரிசி. இந்நிலையில் மக்களில் பலருக்கும் பிரவுன் ரைஸ் நல்லதா இல்லை வெள்ளை அரிசி நல்லதா இதில் எது மிகவும் சிறந்தது என்ற சந்தேகம் உள்ளது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரவுன் அரிசி கைக்குத்தல் அரிசி என்றே சொல்லலாம் நெல்லின் மேல் உள்ள உமிழ் தோலினை நீக்கினால் அதுதான் பிரவுன் ரைஸ் அதில் அதிக அளவு விட்டமின்ஸ் மற்றும் சத்துக்கள் இருக்கிறது. ஆனால் நாம் அதை மேலும் தோலுரித்து தவிடு ஆக்கி சத்துக்களை விலங்குகளுக்கு கொடுத்துவிட்டு சத்தற்ற வெள்ளை அரிசியினை சாப்பிடுகிறோம் இப்படி பிரவுன் ரைசினை வெள்ளை அரிசியாக மாற்றுவதால் 70% சத்துக்கள் காணாமல் போய்விடுகிறது என்பதே உண்மை.
இந்நிலையில் பிரவுன் ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் பிரவுன் ரைஸ் சாப்பிடுவதால் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இதில் சர்க்கரை அளவு 0 ஆகையால் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அரிசி இந்த பிரவுன் ரைஸ். கெட்ட கொழுப்பினை நீக்கி உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த பிரவுன் ரைஸ் மிகவும் உதவியாக இருக்கும். புற்று நயினை வராமல் தடுக்கிறது. சிறுநீரகக் கல் வராமல் தடுக்கிறது.




