பீன்ஸ் பருப்பு உசிலி செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Oplus_131072

பீன்ஸ் பருப்பு உசிலி செய்வது எப்படி….

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு
கடலைப்பருப்பு
சோம்பு
மஞ்சள் தூள்
காய்ந்த மிளகாய்
பீன்ஸ்
பெருங்காயத்தூள்
உப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை

செய்முறை
முதலில், 1/2 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ், ஒரு கப் தண்ணீர், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில், 1/2 கப் துவரம் பருப்பு, 1/2 கப் கடலைப்பருப்பு, தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டு, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின், அரைத்து வைத்துள்ள பருப்பை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து ஆறிய பின், பொடித்துக் கொள்ளவும்.

கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து பொரிந்ததும், தயார் செய்து வைத்துள்ள பருப்பு, வேக வைத்துள்ள பீன்ஸ் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கலந்து விடவும்.

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

 

Read Previous

ஒரு பெண்ணின் ரகசியம்..!! அனைத்து ஆண்களும் படிக்க வேண்டிய தகவல்..!!

Read Next

இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே..!! கணவன்மார்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular