Oplus_131072
புசுபுசுன்னு மென்மையாக இட்லி வர சில டிப்ஸ்
இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 கப் என்ற அளவு சரியாக இருக்கணும்.
உளுந்தை நல்லா பஞ்சுபோல அரைக்கணும்.
அரைக்கும் போது ஐஸ் வாட்டர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தா மாவு சூடாகாது.
வெந்தயம் 1 டீஸ்பூன் சேர்த்தா இட்லி மென்மையா வரும்.
மாவை கையால நல்லா கலக்கணும், அப்போதான் நன்றாக புளிக்கும்.
மாவை இரவு முழுக்க மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைக்கணும்.
அதிகமாக உப்பு சேர்க்கக்கூடாது.
இட்லி ஊற்றும் முன் மாவை அதிகமாக கலக்கக்கூடாது.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவினா ஒட்டாது.
இட்லி வேகும் போது முதல் 10 நிமிடம் மூடி திறக்கக்கூடாது.
மாவில் ஒரு கைப்பிடி அவல் ஊறவைத்து அரைத்துச் சேர்த்தா இன்னும் புசுபுசுன்னு வரும்.
சமைத்த இட்லியை 2 நிமிடம் கழித்து எடுத்தா மென்மை கெடாது.




