தமிழகத்தில் புதிய மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான 17 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு தேவையான நவீன அம்சங்களை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப அறிவு மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப பள்ளிக்கல்வி முறையை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு கருத்துகள் இந்த ஆலோசனையில் பரிமாறப்பட்டு வருகின்றன.




