மாணவர்கள் மீதான தாக்குதல்: பிரதமர் மன்னிப்பு கேட்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி..!!

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மன்னிப்பு கேட்காதது ஏன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், நாட்டின் கல்வி முறையை கரையான் அரிப்பது போல் சிதைத்து விட்டதாகவும், மாணவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மாணவர்கள் போராட்டம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு உதவும் காளான் பட்டாணி மசாலா: செய்வது எப்படி?..

Read Next

புதிய மாநிலக் கல்விக் கொள்கை: பாடத்திட்ட மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular