புதிய ரேஷன் கார்டுக்காகக் காத்திருக்கும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சுமார் 50 ஆயிரம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரேஷன் முகாம்களில் புதிய கார்டு கோருதல், பெயர் மாற்றம் மற்றும் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.




