தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான தேர்வு அறிவிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள தேர்வர்கள் இன்று முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர விரும்பும் தேர்வர்கள், அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் விதிமுறைகளை கவனமாகப் பார்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




