கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலி, வாட்ஸ்அப்பை விட மேம்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கி பயனர்களை கவர்ந்து வருகிறது. வரம்பற்ற கிளவுட் சேமிப்பு, 2 ஜிபி வரையிலான பெரிய கோப்புகளை பகிரும் வசதி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், போன் எண்ணைப் பகிராமல் பயனர் பெயர் மூலம் பேசும் சீக்ரெட் சாட் வசதியும் டெலிகிராமில் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் செய்திகளை தானாக அனுப்பும் ‘ஷெட்யூல்ட் மெசேஜஸ்’ வசதியும் பயனர்களுக்கு உதவியாக உள்ளது. அதேபோல், தானியங்கி ‘பாட்ஸ்’ போன்ற அம்சங்களும் டெலிகிராமை பல்வேறு தேவைகளுக்கு பயனுள்ள செயலியாக மாற்றியுள்ளன.




