வயிற்றைச் சுற்றி தொப்பை ஏற்படுவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை முக்கிய காரணமாகும். இதை குறைக்க தினசரி சில பழக்கங்களை கடைப்பிடிப்பது உதவியாக இருக்கும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், உணவில் அதிக உப்பு மற்றும் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தேன் போன்றவற்றை அளவோடு பயன்படுத்தலாம். காலை காபி அல்லது டீயில் சிறிதளவு பட்டை தூள் சேர்த்துக் கொள்வதும், ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட்ஸ்களை சாப்பிடுவதும் பயனுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிட்ரஸ் பழங்கள், தயிர் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




