Oplus_131072
புளிச்சோறு செய்வது எப்படி…..
தே.பொருட்கள்
சமைச்ச சோறு 800 கிராம்(ஒருகுட்டான்)
புளி 75 கிராம்
பூண்டு 5பல்லு
வத்தல் 4பெரியது
நல்லெண்ணைய் 100மில்லி
வெ.உளுந்து, க.பருப்பு, வேர்கடலை, கடுகு, கறிவேப்பிலை, உப்பு தேவைக்கு…
செய் முறை
உங்கள் விருப்பப்படி சாதம் சமைச்சு வைக்கவும்…புளியை ஊற போட்டு சாறு எடுத்து வைக்கவும்…பூண்டை நறுக்கி வைக்கவும்…
பிறகு அடுப்பில் வாணலி ஏற்றி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடித்ததும் வத்தல்,பூண்டு மற்றும் மேலே சொன்ன அனைத்தையும் போட்டு எல்லாம் பொன்னிறமானதும் புளி கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்..புளி வாசனை போனதும் சாதத்தில் தட்டி கொஞ்சம் ஊய விடவும்….
வத்தலை சுட்டு புளி கரைசலில் நன்றாக பினைந்து விட்டால் நல்ல காரமாக இருக்கும்.




