Oplus_131072
புளிப்பா ஏதாவது சாப்பிடணும்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா இந்த புளி துவையல் உங்க வீட்ல செஞ்சு பாருங்க.. கொஞ்சம் கூட மீதி இல்லாம நீங்க மட்டும் இல்ல உங்க வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்போ அந்த புளி துவையல் எப்படி பண்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புளி
காய்ந்த மிளகாய்
தக்காளி
உப்பு
நல்லெண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய், 1/4 கப் புளி, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான துவையல் ரெடி ஆயிடுச்சு. நீங்களும் உங்க வீட்ல ட்ரை பண்ணுங்க.




