பூண்டு பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதா..?? கெட்டதா..??
பூண்டு பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதா இல்லை கெட்டதா என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
பூண்டை பச்சையாக எடுக்கும் போது ஒன்று அல்லது இரண்டு பற்களுக்கு மேல் எடுக்க வேண்டாம். பச்சையாக சாப்பிடும் போது உடல் எடை குறையும். இரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைப்பதால் இதய நலனுக்கும் நல்லது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். பிரசவித்த பெண்கள் பூண்டு சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு நன்றாக இருக்கும். ஆண்களுக்கும் தாம்பத்திய உறவின் போது, ஆனா வீரியத்துக்கு உதவும் பச்சையாக சாப்பிடுவது நல்லது. என்பதற்காக அளவு தாண்ட வேண்டாம். அப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது தான் சிலருக்கு வாய் எரிச்சல் குமட்டல் வாந்தி போன்றவை ஏற்படும். வயிற்றில் புண்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மற்றபடி தினமும் ஏதேனும் ஒரு வகையில் பூண்டை சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.




