பூவரசன் மரத்தில் உள்ள இலை, வேர் வேர் என அனைத்திலும் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்..!!
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் வீட்டை சுற்றி உள்ள செடிகளையும் மரங்களையும் வைத்தே குடலில் ஏற்படும் நோய்களுக்கு மருத்துவம் செய்வார்கள். அந்த வகையில் பூவரசன் மரத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன அது எந்த வகையான நோய்களை குணப்படுத்தும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பூவரசு மரத்தின் வேர்ப்பட்டை மற்றும் பரங்கிப்பட்ட இரண்டையும் சம அளவு எடுத்து பசும்பாலில் அவித்து வெயிலில் காயவைத்து பொடி செய்யவும் இதில் 5 g பொடியை தயிர் அல்லது மோர் அல்லது பசு வெண்ணையில் கலந்து மதிய வேளையில் சாப்பிட்டு வந்தால் 60 நாள்களில் குஷ்ட நோய் குணமாகும். பூவரசு மரத்தின் இலையை வெயிலில் உலர்த்தி எரித்து சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்து சொறி சிரங்குகளில் தடவி வந்தால் குணம் பெறலாம் .பூவரசு மரத்தின் வேர் பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சி அதில் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து குடித்தால் பேதி குணமாகும்.




