பெண்களுக்கு மாதந்தோறும் வரும் இந்த மாதவிடாய் வலியால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் வலி தீவிரமாக இருக்கும். இந்நிலையில் இந்த வலியை எவ்வாறு போக்குவது என்பது பற்றியும் இதற்கான வீட்டு வைத்தியம் என்ன என்பதை பற்றியும் நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
முதல் நாள் இரவு ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த நாள் காலையில் இந்த வெந்தயம் ஊறிய தண்ணீரை அவ்வப்போது குடித்து வர வேண்டும். அதுபோக ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு ஒவ்வொன்றையும் 50 கிராம் வீதம் எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு அரைத்த பொடியில் கசாயம் செய்து காலை வேளையில் தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்து வர வேண்டும். மாதவிடாய் வலி முற்றிலும் குணமாகும்.




