நம் முன்னோர்கள் காலக்கட்டத்தில் இருந்து சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள் அதன்படி அந்த வீட்டில் இருப்பவர்கள் நடந்து கொள்வார்கள் பூஜையில் இருந்து வேலைக்குச் செல்லும் வரை சமையலறை வரை சில ஆன்மீக குறிப்புகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் செயல்படுவதால் ஒரு சில வீடுகளில் நடக்கும் தேவையில்லாத விரைய செலவுகளுக்கும் பணம் பற்றாக்குறைக்கும் காரணமாகும். அந்த வகையில் இப்பதிவில் குறிப்பிடும் ஆன்மீக குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் மற்றும் வெளியே செலவுகளை தவிர்க்க முடியும். அதுபோன்ற ஆன்மீக குறிப்புகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
1. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத பொருட்களை வைக்கக்கூடாது. குறிப்பாக உடைந்த பொருட்களை பூஜை அறையில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் அது இறை சக்தியை குறைத்து எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும். எனவே பூஜைக்கு தேவையான பொருட்களை மட்டும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
2. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலையில் தினந்தோறும் எழுந்தவுடன் நமது வலது உள்ளங்கையை பார்த்து எழுவதன் மூலம் மகாலட்சுமி தரிசனம் நமக்கு கிடைக்கும்.
3. பெண்கள் வெற்றிக்கு பொட்டு வைக்காமல் ஒருபோதும் பூஜை அறைக்கு செல்லாதீர்கள் மற்றும் பூஜை செய்யாதீர்கள்.
4. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. மற்றும் இரு கைகளால் தலையை சொரிதல் கூடாது.
5. கர்ப்பமாக உள்ள பெண்கள் தேங்காய் உடைக்க கூடாது.
6. வீட்டு பூஜை அறையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் மிகவும் நல்லது. ஒரு போதும் நாம் அதை அணைக்க கூடாது.
7. மேலும், கோயிலுக்குச் செல்லும் போது மற்றவர்கள் ஏற்று வைத்த விலக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றவே கூடாது.
8. பூஜை அறையில் அமைந்து ஓ என்ற மந்திரத்தை தினமும் பூஜை அறையில் உட்கார்ந்து தியானம் செய்து சொல்லி வந்தால் எப்பேற்பட்ட விடையும் வியாதியும் அவரை ஒருபோதும் நெருங்காது.
9. சனி பகவானுக்கு வீட்டில் எங்களுக்கு ஏற்ற கூடாது.
10. குறிப்பாக வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறு கும்பிடக்கூடாது உட்காந்து தான் கும்பிட வேண்டும்.




