பெண் என்று சொல்வதில் பெருமை கொள்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

பெண் என்று சொல்வதில்
பெருமை கொள்
♥என் செல்லமே..
உன் கம்பீரத்தை கண்ணில் காட்டு ,
உறுதியை செயலில் காட்டு,
தன்னம்பிக்கையை நடையில் காட்டு ,
தைரியத்தை பேச்சில் காட்டு ,
தன்மானத்தை அனைவரிடத்திலும் காட்டு விடமுயற்சியை உன் வெற்றியில் காட்டு ,
அன்பை அனைத்து உயிர்களிடத்தும் காட்டு ,
♥இச் சமுதாயம் உன்னை மிரட்டத்தான் பார்க்கும்.
பெண் குலத்தின் செல்வம் அடி -நீ
இதற்கெல்லாம் பயந்துவிடாதே.
♥சமயலும் , குடும்பமும் எல்லைக்கோடென கிழித்துவிடாதே.
அது உன் வாழ்வில் ஒரு அங்கம் அதையும் மறந்துவிடாதே .
வாழ்வோடு என்றும் சமரசம் செய்துகொள்ளதே
♥பார் வந்து வெளியே ….
ஒவ்வொரு நொடியும் உன் இனம்
ஏதோவொரு மூலையில்
கூக்குரல் எழுப்பிக்கொண்டு இருக்கிறது
♥அவளுக்கு இயன்றவரை துணை நில்
முயன்றவரை உதவிடு
அவள் மீண்டும் உயிர்த்தெழும் வரை உற்சாகம் கொடு
வாழ்வதற்கு ஊக்கம் கொடு
இயலாத நிலையில் ஆறுதலாவது கூறிடு
♥மனித குலத்தை காக்க வந்த பெண் நீயே கைவிட்டால் அப் பேதைய்தனை காத்திடுவது யார் ? மங்கையே..

Read Previous

அப்பாவை பற்றி மகள் எழுதிய அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

10th, 12th, ITI Pass போதும்..!! மாதம் ரூ.20,000 சம்பளத்தில் அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular