நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காமாட்சி என்பவர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், காமாட்சி உயிரிழப்புக்கு பணிச்சுமை தான் காரணம் என அவரது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பது எடுத்த காமாட்சிக்கு தொடர்ந்து இரவு பணி வழங்கியதாகவும், கேட்டதற்கு ‘நீ அப்படி தான் பார்க்கணும்’ என போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார்.




