பெரும் சோகம்..!! கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட திருநங்கைகளின் தலைவி..!!
ஹாசினி (35) திருநங்கை ஆந்திர மாநிலத்தின் கொடவலூர் மண்டலத்தை சேர்ந்தவர். இவர் திருப்பது நெல்லூர் பகுதியை சேர்ந்த திருநங்கைகளுக்கு தலைவியாக இருந்தவர். இந்த நிலையில் (நவ. 26) சில மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஹாசினியின் சடலம் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு, ஆந்திராவை சேர்ந்த திருநங்கைகள் குவிந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




