அசம்பாவிதங்கள் அல்லது விபத்துகள் நடந்ததால் பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் வீடுகளை மீண்டும் விற்பனை செய்யும் நோக்கில், ஜப்பானில் வீட்டு உரிமையாளர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
பேய் இருப்பதாக நம்பப்படும் இந்த வீடுகளில் ஒரு இரவு தங்கி, அங்கு எந்த அசாதாரண சம்பவமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நபர்களுக்கு சுமார் ₹52,000 ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், அந்த வீடுகள் பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையை வாங்குபவர்களிடம் ஏற்படுத்தி, நீண்ட காலமாக விற்கப்படாமல் இருக்கும் வீடுகளை சந்தைப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
ஆனால், இந்த நடைமுறை ஜப்பானின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அதிகாரப்பூர்வ திட்டமாக இல்லை; சில தனியார் நிறுவனங்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் மேற்கொள்ளும் முயற்சியாகவே இது கூறப்படுகிறது.




