தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், மாநிலங்களுக்கு இடையே உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்பட தமிழகம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாகவும் தனது கருத்தை முன்வைத்த விஜய், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையாத வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




