தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய் பேசிய முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். அதேபோல், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த விஜய், 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




