தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த விமல் ராணி (43) என்பவர், தனது மகன் கொலை வழக்கில் கைதாகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




