மகளிர் உரிமைத் தொகை 2024: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 16 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் இணைய பல பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, பொருளாதார தகுதியில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘ 2025 ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்’.
அதுமட்டுமின்றி ‘முதியோர் உதவித்தொகைக்கு தற்போது விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள எல்லோருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்’ என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.




