இந்த நவீன காலகட்டத்தில் சிறியதாக ஒரு தலைவலி வந்தால் கூட ஹாஸ்பிடலுக்கு உடனே சென்று விடுகிறார்கள். மருத்துவமனைக்கு செல்வது நம் நோயை போக்க என்னும் நோக்கம் நல்லதுதான். ஆனால், தொட்டதுக்கெல்லாம் மருத்துவமனை போகும் பழக்கத்தை சற்று தள்ளி வைத்து வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சில நோய்களை எல்லாம் போக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் வீட்டிலேயே அனைத்து வகையான நோய்களுக்கும் மருந்து செய்து இயற்கையான முறையில் கொடுப்பார்கள். அந்த வகையில் ஒரு சில நோய்களுக்கு வீட்டிலேயே இயற்கை மருத்துவம் மூலம் சரி செய்யலாம். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் திராட்சையை சாப்பிட வேண்டும். மூளைக்கு நன்றாக வலியூட்ட வல்லாரைக் கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் முதுகுத்தண்டு வலிக்கு வீட்டிலேயே பப்பாளி பழம் சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம். ரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காது மந்தம் சளி போன்றவற்றிற்கு தூதுவளை ஒரு சிறந்த மருந்தாக காணப்படுகிறது. மூத்திரக் கடுப்பு உள்ளவர்கள் பசலைக் கீரையை உணவில் வாரத்தில் ஒரு மூன்று முறையாவது சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உடல் சூடு குறைய முருங்கை கீரை மற்றும் வெந்தயத்தை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வர இது குணமாகும். நீரிழிவு நோய்க்கு துளசி இலை ஒரு சிறந்த மருந்தாக காணப்படுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப் பூண்டு ஒரு மருந்தாகும். இவ்வாறு நம் வீட்டில் உள்ள சமையல் அறையிலேயே அனைத்து வகையான நோய்களுக்கும் இயற்கை மருத்துவம் உள்ளது இதை சாப்பிட்டு சரியாகவில்லை என்றால் மருத்துவர் அணுகுவது நல்லது.




