இன்றைய காலகட்டத்தில் பலரும் மதிய நேரத்தில் தூங்குவது ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றனர், வீட்டில் இருப்பவர்கள் வேலை முடித்துவிட்டு ஓய்வு எடுப்பதற்காக மதிய நேரத்தில் சற்று நேரம் உறங்குகின்றனர் ஆனால் மதிய உறக்கம் உடலுக்கு நல்லதா அல்லது தீமையை ஏற்படுத்துமா என்று பலரும் அறிவதில்லை, ஆனால் மதிய தூக்கம் என்பது உடலுக்கு சற்று ஓய்வும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும் இதனால் உடலுக்குள் உள்ள உறுப்புகள் அனைத்தும் சற்று அமைதியான முறையில் இயங்கும்..
என்னதான் இரவு தூங்கினாலும் மதியம் சிலருக்கு தூக்கம் கண்ணை கட்டும் மதியம் தூங்குவதால் உடலுக்கு எந்த ஒரு கெடுதலும் வராது இன்னும் சொல்லப்போனால் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன, மதியம் தூங்குவதால் நினைவு சக்தி அதிகரிப்பு, மற்றும் திறன் அதிகரிப்பு, நல்ல மனநிலை, துடிப்புடன் இருப்பது, மன அழுத்தம் குறைவது என ஏராளமான பலன்கள் உள்ளதாக கூறுகின்றனர் மேலும் நீங்கள் தாராளமாக மதிய நேரத்தில் ஒரு குட்டி தூக்கத்தை போடலாம்…!!



