மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது..
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சமீபத்தில் பெயர்ந்து விழுந்தது இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது இதற்கு விளக்கம் நீதிபதி எம் எஸ் ரமேஷ் நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கை விசாரித்து நீதிபதிகள் திருச்சி என்.ஐ.டி கல்லூரியின் சிவில் துறை தலைவர், மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், ராஜாஜி மருத்துவமனையின் டீன், ஆகியோர் அடங்கிய குழுவினர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர், இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் அனைத்து சூழல்களும் கண்காணிக்கப்படுகிறது என்று விரித்துள்ளனர் ஐகோர்ட் நீதிபதிகள்..!!




