மத்தியப் பிரதேசம்: அரவிந்த் – நந்தினி தம்பதிக்கு கடந்த 2023ல் திருமணம் நடந்தது. அரவிந்துக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த நந்தினி போலீஸ் புகார் கொடுத்தார். கைதான அரவிந்த் பின்னர் விடுதலையானார். இந்நிலையில் நந்தினிக்கு அங்குஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அங்குஷ் பிறந்தநாள் பார்டியில் நந்தினி கலந்து கொண்ட வீடியோவை பார்த்து ஆத்திரமடைந்த அரவிந்த் மனைவியை சுட்டு கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.




