ராஜஸ்தானில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து தனது உறவினரைக் கொன்று, ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி சுரங்கத்தில் உடலைப் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. நாகௌர் மாவட்டத்தின் பவந்தாவைச் சேர்ந்த சோஹன்ராமை போலீசார் கைது செய்தனர். இவர் ஆக., 27-ல் தனது உறவினர் முகேஷை கொன்றதாக ஒப்புக்கொண்டார். இரும்புக் கம்பியால் தலையில் பலமுறை தாக்கிக் கொன்றுவிட்டு, சடலத்தை புதைத்த நிலையில், போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர்.




