திரைத்துறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்த வகையில் தற்போது விடை தெரியாத ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? இல்லையா என்பது தான்.
அதாவது சேவாக், அவரது மனைவி ஆர்த்தி ஆலவத்தை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004இல் 2 பேரும் திருமணம் செய்த நிலையில், 20 ஆண்டாக சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில், 2 பேர் இடையே பல மாதங்களாக கருத்து மோதல் நிலவியதாகவும், இன்ஸ்டாகிராமில் 2 பேரும் பின்தொடர்வதை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




