இன்றைய காலகட்டத்தில் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர், முறையான உணவு முறை இன்றி நாம் சாப்பிடும் உணவு முறையில் மாற்றம் மேலும் தண்ணீர் சத்து குறைபாடு இவற்றின் முதல் காரணமே மலச்சிக்கலாகும், உணவு முறையில் மாற்றம் என்பது கடினமான உணவை எடுத்துக் கொள்ளும் பொழுது நமது உடலில் உள்ள செரிமானத்தன்மை பிரச்சனை ஏற்படுத்தும் பிறகு செரிக்காமல் மலம் கழிப்பதற்கு சிரமம் ஏற்படும், மலம் கழிக்க சிரமம் ஏற்படும் பொழுது மலச்சிக்கல் உண்டாகிறது மேலும் மலச்சிக்கல் சரியாக சில வீட்டு வைத்தியங்களை நாம் கையாண்டாலே போதும்..
எள் விதையை பொடி செய்து பனைவெல்லத்துடன் கலந்து நான்கு முதல் ஆறு தேக்கரண்டி அளவிற்கு தினமும் உண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும், மேலும் நீர் ஆகாரங்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளும் பொழுது விரைவில் செரிமானமடைந்து மலச்சிக்கலை தீர்ப்பதற்கான வழி கிடைக்கும்..!!




