சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இதில், பெற்றோர்கள் தங்கள் மகளின் பெயரில் ஒரு கணக்கைத் திறந்து, சிறிது சிறிதாக டெபாசிட் செய்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தொகையைப் பெறலாம். மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.1,80,000 மற்றும் வட்டியாகப் பெறப்பட்ட தொகை ரூ.3,74,206 ஆகும். 21 வயதில் பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.5,54,206 ஆக இருக்கும்.




