மாதம் ரூ.71,900 வரை சம்பளம்..!! தமிழ்நாடு MRB-ல் மெகா வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் வாரியம் காலியாக உள்ள 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு- II பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு மாதம் 19, 500 முதல் 71, 900 முறை சம்பளம் கொடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 16/11/2025 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 12-ஆம் வகுப்பில் உயிரியல், அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்திட்டத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பன் நோக்கு சுகாதாரப் பணியாளர்( ஆண்), சுகாதார ஆய்வாளர்(HI), சுகாதார துறை ஆய்வாளர்(SI) பாட பிரிவின் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

18 வயது பூர்த்தி அடைந்த தகுதியுடைய நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதலில் தமிழ் மொழி தகுதி தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக கணினி வழி தேர்வு நடத்தப்படும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ,டிஏபி பிரிவினருக்கு 300 ரூபாய் கட்டணமும், மற்ற பிரிவினருக்கு 600 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது. https://mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read Previous

ஆண்களே, இயற்கையாகவே ‘அந்த ஹார்மோன்’ அளவை அதிகரிக்கலாம்..!!

Read Next

சொந்த ஊரை விட்டு பிழைப்பு தேடி ஓடி உலகின் எங்கெங்கோ மாட்டிக்கொண்ட.. அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular