நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக இயற்கையான முறையில் கூறப்படுவது தான் கருஞ்சீரகம். இந்நிலையில், இந்த நவீன காலகட்டத்தில் பல பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை என்பது இருக்கிறது. சொல்லப்போனால் மாதவிடாய் பிரச்சனை என்பது அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். அதற்குக் காரணம் ஹார்மோன் குறைபாடு மற்றும் மன அழுத்தம் மற்றும் உடல் எடை கூடுதல் போன்ற பல காரணங்களால் மாதவிடாய் தள்ளிப் போகும். இந்த பிரச்சனைக்கு பல பெண்களும் மருத்துவமனைக்கு சென்று ட்ரீட்மென்ட் எடுக்கின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே இதற்கான இயற்கை மருத்துவம் என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
மாதவிடாய் தள்ளி போகுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, பிசிஓடி பிரச்சனைகள் சரியாக. கருஞ்சீரகத்தை அரைத்து பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் குழைத்து தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வர பிரச்சனைகள் சரியாகும். கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும்.




