மாநாட்டுக்கு அழைப்பு தேவையில்லை புஸ்ஸி ஆனந்த்…!!

தமிழக வெற்றி கழக கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுவிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் விஜய் முகத்தை கண்டாலே மக்கள் கூட்டம் தானாக வந்து சேரும் என்று அவர் கூறியுள்ளார்…

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி சார்பில் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறுகிறது இந்த நிலையில் இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த் நம் மாநாட்டுக்கு வாருங்கள் என யாருக்கும் அழைப்பு விடுவிக்க தேவையில்லை விஜய் முகமே போதும் கூட்டம் தானாக வந்து சேரும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் 18 வயது நிரம்பிய பலரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடவில்லை விஜய்க்கு தான் எங்கள் முதல் ஓட்டு என கூறி அவர்கள் வாக்களிக்கவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார், மேலும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் விஜய் தான் தமிழக முதலமைச்சராக ஆளுமை செய்வார் என்றும் அதற்கு மக்கள் வழிவகுப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்..!!

Read Previous

அமைச்சரவையில் 4 பேர் வெளியேற்றும் 3 பேர் பதவிவேற்பு…!!

Read Next

எச்.ராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கோபி சுதாகர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular