விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு மருந்து வழங்க வந்தவர்களை காவல்துறையினர் தடுத்ததாகவும், இது மனித உரிமை மீறலுக்கு ஒப்பான செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய தவெக ஆட்சியில் ஜனநாயக நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதாக விமர்சித்த அவர், “இது சாத்தானின் ஆட்சி” என்று கடுமையாக சாடியுள்ளார்.
காவல்துறையினர் அரசியல் அழுத்தங்களுக்கு இடமளிக்காமல், சட்டத்தின் அடிப்படையிலும் மனசாட்சிப்படியும் செயல்பட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.




