உன் நெஞ்சுக் குழியின் மேல்
துளிர்த்த வியர்வையில்
என் வாசம்…![]()
உன் இதழ்களை அசைக்கவே
வேண்டாம்
விழிகளை அசைத்துவிடு போதும்…![]()
உன் நாடியின்
துடிப்பறிவேன்…
தேனீர்கான
நேரமிதுவென…![]()
என் ஆயுளை
நிர்ணயிக்கும்
பாசக்கயிறு
உன்னிடம்தான் உள்ளது…![]()
நெருப்பு என்கிறாய்
பனி மழையை
நீ ஒளித்து வைத்துக்கொண்டு…![]()
என் மொழியை
முழுமையாய் உணர்ந்தவன்
நீ…
எதற்கு அகராதியை தேடுகிறாய்…![]()
கிழக்கும் மேற்குமாய்
வடக்கும் தெற்குமாய்
அலைமோதுகிறது
நம் காதல்…![]()
இருவரின் பாதையும்
ஒரு வழிப் பாதைதான்
மீளயியலாது..




