இறைச்சி என்றாலே அனைவருக்கும் மிகுந்த ஆர்வம் இருக்கும். மாமிசம் சாப்பிட யாருக்கு தான் புடிக்காது. அனால், அதில் நன்மை இருக்கிறதா என்று பல பேருக்கு குழப்பம் இருக்கும். அந்த வகையில் இன்று மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் காண்போம்.
மீன் இரண்டு வகை படும். கடலில் வாழ்வது மற்றும் நன்னீரில் வாழ்வது. இரண்டிலும் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. நமது உடலில் இருக்கும் பல்வேறு நோய்கள் நம்மை விட்டு ஓட நாம் தொடர்ந்து மீனை அடிகடி உணவில் சேர்பது நல்லது. வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் சாப்பிட்டால், சிறுநீரக பிரச்சனைகள் கட்டுப்படும்.
மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உறுதி என ஆஸ்திரேலியா நாட்டில் செயல்பட்டு வரும் ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் குளோபல் ஹெல்த் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மெக்னீசியம், பாஸ்பிரஸ், கால்சியம், வைட்டமின் டி, இரும்புச் சத்து போன்ற சத்துக்கள் மீனில் நிறைய இருக்கிறது. இது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. தினமும் உடற்பயிற்சி செய்வோர் வாரம் 2 முறையாவது மீன்களை சாப்பிட வேண்டும். மேலும், கண் பார்வை சார்ந்த பிரச்சனை இருந்தால் மீன் ஒரு சிறந்த மருந்து ஆகும்.




