Oplus_131072
நம்மில் பலரும் அசைவ உணவுகளில் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஒன்று என்னவென்றால் அது இந்த மீன் ப்ரை .அந்த மீன் ப்ரை கடைகளில் கொடுக்கும்போது மீனோடு மசாலா ஒட்டி நன்றாக இருக்கும். ஆனால், அதுவே நாம் வீட்டில் செய்யும் போது மசாலா பொரிக்கும் போது எண்ணெயில் தனியாக பிரிந்து போய்விடும். அவ்வாறு இல்லாமல் மசாலா மீனில் ஒட்டி எப்படி பொரிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஒரு மிக்ஸிஜாரில் 3 சின்ன வெங்காயம் ,
4 பள்ளு பூண்டு ,
அரை ஸ்பூன் சீரகம்
கால் ஸ்பூன் சோம்பு ,
அரை ஸ்பூன் மிளகு ,
4 இதழ் கருவேப்பிலை
3 ஸ்பூன் மிளகாய்த்தூள் ,
ஒரு ஸ்பூன் மல்லித்தூள் ,
ஒரு ஸ்பூன் குழம்புமிளகாய்த்தூள்
ஒரு ஸ்பூன் எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சேர்த்து அரைத்து
மீனோட எல்லா பகுதியையும் நன்கு தடவி அரைமணிநேரம் கழித்து பொரித்து பாருங்கள் மீனின் சுவை சூப்பரா இருக்கும்.




