முகக்கண்ணாடி சொல்லும் முத்தான பாடங்கள்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

முகக்கண்ணாடி சொல்லும் முத்தான பாடங்கள்…!!!

*முதல் பாடம் –

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடியே காட்டுகிறது அல்லவா? அதே போல் நம் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்..!

**இரண்டாம் பாடம் –

கண்ணாடி முன்னால் நாம் நிற்கும்போது மட்டும்தான் அது நம் குறையைக் காட்டுகிறது. நாம் அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.
இது கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்..!

***மூன்றாம் பாடம் –

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே..! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்…!

நிலைக்கண்ணாடி தரும் நிலையான பாடங்கள் இவை …!

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை பார்க்கும் போதெல்லாம் இந்த பாடங்கள் உங்கள் மனதில் ஒலிக்கட்டும்…!

 

Read Previous

1990s ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை..!! சிரிப்போடு கண்ணீர் வரும்..!!

Read Next

அனுபவம் தத்துவம்..!! மரணம் நெருங்கும்போது, மனிதர்களின் கண்களுக்கு தெரிவது என்ன..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular