Oplus_131072
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
முடக்கத்தான் கீரை1 கட்டு
தக்காளி 3
சீரகம்3 டீஸ்பூன்
மிளகு அரை டீஸ்பூன்
பூண்டு பல்4
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை1 கைப்பிடி
கறிவேப்பிலை1 கொத்து
செய்முறை :
முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், மிளகு ஆகியவற்றைப் பொடியாக்கி சேர்த்து வறுத்து கொண்டு, வேக வைத்த முடக்கத்தான் கீரை மற்றும் தக்காளி கரைசலையும் சேர்க்கவும்.
பிறகு பூண்டு, கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்கவைத்து தேவையான அளவு உப்பை போட்டு இறக்கி வைத்து கொள்ளவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.




