Oplus_131072
முதுமையில் தனிமை வரமா சாபமா அவசியம் இந்த பதிவை பாருங்கள். கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல வில்லாக்களை பிரபல கட்டுமான நிறுவனம் கட்டி வருகிறது. அங்கே வீடு வாங்க வேண்டும் என்றால் வருட கணக்கில் புக் செய்துவிட்டு காத்திருக்க வேண்டும். அப்படி என்ன இருக்கிறது என்ற நண்பரிடம் கேட்டபோது வீடு மட்டும் வாங்கினால் போதும் தினசரி வீடு பராமரிக்க துணி துவைக்க ஆட்கள் வருவார்கள். உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டுக்கே மருத்துவர்கள் வருவார்கள். முக்கியமாக சமைக்க தேவையில்லை மூன்று வேளை உணவு டீ, காபி ஸ்னாக்ஸ் எல்லாம் வந்துடும். 24 மணி நேரமும் செக்யூரிட்டி பாதுகாப்பு சுகாதாரமான தண்ணீர் என எதற்கும் நீங்கள் வெளியில் செல்ல வேண்டியது இல்லை அருமை என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது ஆனால் அதற்கு பின் ஒரு வலி இருக்கிறது. ஆம் அங்கு வசித்து வரும் நபர்களெல்லாம் தங்களது வாரிசுகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாகி வெளியூர்களிலும் வெளி மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் செட்டிலாக இங்கு இவர்களை கவனிக்க இது போன்ற நிறுவனங்களை நாடி வீடு வாங்கி தங்க வைத்து விடுகிறார்கள் நல்ல விஷயம் தானே என கேட்க தோன்றும் நல்ல விஷயம் தான். ஆனால் முதுமையில் தேவை என்னவோ இந்த வசதிகள் மட்டுமே இல்லை. வாரிசுகளின் அன்பு பாசம் அரவணைப்பு பேரன் பேத்திகளின் குறும்புகள் என இது போன்ற வசதிகளில்லை மிகவும் கொடியது முதுமையில் தனிமை .




